விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களை தட்டிப்பறிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்-ராமதாஸ்.

Saturday, October 11, 2014

சென்னை: விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் நிலங்களை தமிழக அரசே பிடுங்குவது அவர்களை உயிருடன் கொலை செய்வதற்கு சமம் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள 1110 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

காளையார்கோயிலில்தீ விபத்து.

Tuesday, October 7, 2014

அதிமுகவினர் வெடி போடும் போது மாமன்னர் மருதுபாண்டியர்களால் கட்டப்பட்ட காளையார்கோயில் காளீஸ்வரர் ஆலய இராஜகோபுரத்தில் தீ விபத்து.

செய்தி வாசிப்பாளராக திருநங்கை

Tuesday, September 30, 2014

கோவை: லோட்டஸ் டிவியில் பத்மினி பிரகாஷ் (31) என்ற திருநங்கை, செய்தி வாசிப்பாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார். இதன்மூலம், இத்துறையில் பணிபுரியும் முதல் திருநங்கை என்ற பெருமையை பத்மினி பிரகாஷ் பெற்றுள்ளார்.

தொடர்ந்து நடக்கும் இலங்கை கடற்படையின் அட்டுழியம் -கண்டு கொள்ளதா அரசுகள்.

Monday, September 15, 2014

பூம்புகார் பகுதியை சேர்ந்த மீனவர்கள் வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான விசைபடகு மற்றும் பைபர் படகு மூலம் நாகை அருகே கோடியக்கரை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர்அத்துமீறி நுழைந்து வலைகளை கிழித்தும், பல்வேறு ஆயதங்களால் படகுகளை உடைத்தும், 21 மீனவர்களை சிறைபிடித்து அவர்களது விசைப்படகை கைப்பற்றியுள்ளனர்.

வலையில் சிக்கியிருந்த ஒன்றரை டன் மீன்களையும் அள்ளிச்சென்றனர். இதில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் பூம்புகார் பகுதியை சேர்ந்த மீனவர்கள்

மாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்ப-ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

மலேசியா: மாயமான மலேசிய விமானத்தை தேடும் குழுவினர் இந்திய பெருங்கடலில் இருந்து 58 கடினமான பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். அது மலேசிய விமானத்தின் உதிரி பாகங்கள் தானா? என்று அறிய ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி நடுவானில் மாயமானது.

சவுதியில் சாராயம் காய்ச்சிய இந்தியர் கைது.

Saturday, September 13, 2014

சவுதி அரேபியாவின் வடமேற்கு பகுதியில் கள்ளச்சாராயாம் காய்ச்சிய 3 இந்தியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின்படி, ஹெய்ல் நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி ரெய்டு நடத்திய போலீசார், அந்த வீட்டினுள்

தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதி திட்டம்

Friday, September 12, 2014

ஐ.எஸ்.ஐ., எனப்படும், பாக்., உளவு அமைப்பு ஆதரவுடன், இலங்கையில் தளம் அமைத்து செயல்படும் பாக்., பயங்கரவாத அமைப்பு, தமிழகத்தில் தாக்குதல் நடத்தும் சதி திட்டத்தை, அரங்கேற்ற இருப்பதாக, கைது செய்யப்பட்டுள்ள, பாக்., உளவாளி, 'பகீர்' வாக்குமூலம் அளித்து உள்ளான்.

கேரளாவுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Friday, September 5, 2014

சென்னை: தமிழக எல்லைக்குட்பட்ட முல்லைப்பெரியாறு நீர்பிடிப்பு பகுதியில், கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என கேரளாவுக்கு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான ஆனைவச்சாலில் கேரள வனத்துறை வாகன நிறுத்தும் இடம் அமைத்து வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலர் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆசிட் வீச்சுக்கு உள்ளான இளம்பெண் வினோதினி சிகிச்சை பலனின்றி காலமானார்.

Tuesday, February 12, 2013

காதலை ஏற்க மறுத்ததால் ஆசிட் வீச்சுக்கு உள்ளான இளம்பெண் வினோதினி இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் ஒருதலைக் காதலை நிராகரித்த வினோதினி என்ற 23 வயது இளம்பெண் மீது சுரேஷ் என்பவர் கடந்த நவம்பர் மாதம் 14ம் தேதி ஆசிட் வீசப்பட்ட கொடூர சம்பவம் நடந்தது. இதனால் தன்னுடைய இரண்டு கண் பார்வையையும் முற்றிலுமாக இழந்தார் வினோதினி.

தேவரின மக்கள் மீது அடக்கு முறையை கண்டித்தும்-" புதுமலர் பிரபாகரன்" மற்றும் "சண்முகையா பாண்டியன்" ஆகியோரை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த வெள்ளி கிழமை அன்று ராஜபாளையத்தில் தேவரினம் வஞ்சிக்கப்படுவதையும் ,தேவரினத்தின் மீதான அடக்கு முறையையும்,தேவரின படுகொலைகளை கண்டித்தும் ,
தேவரின மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஒரே காரணத்திற்க்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சகோதரர்கள் புதுமலர் பிரபாகரன் மற்றும் சண்முகையா பாண்டியன் அவர்களை விடுதலை செய்ய கோரியும்.ஒரு தலைபட்சமாக தேவரின மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் தமிழக அரசை கண்டித்தும் வன்கொடுமை சட்டம் தேவரின மக்கள்

மலேசியாவில் இன்று சீன புத்தாண்டு கொண்டாட்டம்.

Monday, February 11, 2013


இன்று பினாங்கில் பிரதமர் நடத்தும் சீனப் புத்தாண்டுப் பொது உபசரிப்பில் தென் கொரியாவின் ‘சூப்பர் ஸ்டார்’பாடகர் Psy கங்னாம் ஸ்டைல் பாடலைப் பாடி மகிழ்விக்கும் வேளையில், மலேசியா எப்போது தென்கொரியா அளவுக்கு முன்னேறும் என்றோ இரு நாடுகளுக்குமிடையிலான இடைவெளி எப்போது குறையும் என்றோ நஜிப் அப்துல் ரசாக் ஓர் அறிக்கை விடுவாரா?

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் 17-வது மாநில மாநாடு.

Saturday, February 9, 2013

பிப்ரவரி 23,24,25 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் 17-வது மாநில மாநாடு சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச்செயலாளர் பிஸ்வாஸ் தலைமை வகிக்கிறார். அகில இந்திய தலைவர் வேலப்பன் நாயர் முன்னிலை வகிக்கிறார்.தமிழ் மாநில பொதுச்செயலாளரும் உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கதிரவன் மற்றும் அமைப்பின் முன்னனி நிர்வாகிகள் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள்.தமிழகம் மற்றும் பல மாநிலங்களிலும் இருந்து பல்லாயிரக்கான தொண்டர்களும் வர இருக்கிறார்கள்.

அப்சல் குருவின் உடல் திகாரில் அடக்கம். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வன்முறை.

தூக்கு தணடனை நிறைவேற்றப்பட்டுள்ள பயங்கரவாதி அப்சல் குருவின் உடல், திகார் சிறையிலேயே புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவனது உடலை வெளியுலகிற்கு கொண்டு வரும் பட்சத்தில், அசம்பாவித சம்பவங்கள் நிகழக்கூடும் என்ற கோணத்தில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

மதுவிற்காக 70 வயது மனைவியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த கணவர்.

Friday, February 8, 2013

தூத்துக்குடி அருகே மதுபானம் குடிப்பதற்காக தங்க தாலிச்செயினை அடகு வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த 70 வயது மனைவியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த 75 வயது கணவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், மேலஆழ்வார் தோப்பைச் சேர்ந்த அர்ச்சுனனின்(வயது 75) மனைவி பெரியபிராட்டி(வயது 70).

மாமதுரையை போற்றுவோம்-மதுரையின் பழம்பெருமையை விளக்கும் விழா.

மதுரையின் பழம்பெருமையை விளக்கும் வகையில் 'மாமதுரையை போற்றுவோம்' விழா இன்று தொடங்கி வரும் 10ம் தேதி வரை நடக்கிறது.

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரிய மதுரை, உலகளவில் பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது.