மதுரையின் பழம்பெருமையை விளக்கும் வகையில் 'மாமதுரையை போற்றுவோம்' விழா இன்று தொடங்கி வரும் 10ம் தேதி வரை நடக்கிறது.
இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரிய மதுரை, உலகளவில் பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது.
அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை.
திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்" என்றும் கலித்தொகையில் "நான்மாடக்கூடல்" என்றும் சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை" என்றும் அழைக்கப்படுகிறது.
18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வசம் சென்றாலும் மதுரையின் கலைகள் அழியவில்லை. ஒவ்வொரு வம்சத்தினரின் ஆட்சி காலத்திலும் கலை, இலக்கியம், பண்பாடு, கலாசாரத்தில் மதுரை சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மாமதுரை போற்றுவோம் இத்தகைய சிறப்புகள் வாய்ந்த மதுரையின் பெருமைகளை விளக்கும் வகையில் மாமதுரை போற்றுவோம் நிகழ்ச்சி இன்று தொடங்கி வரும் 10ம் தேதிவரை நடக்கிறது.
இதற்காக அழகர்கோவில் அருகே கிடாரிப்பட்டியில் உள்ள சமணர் படுகை அருகே தீபம் ஏற்றப்பட்டது.இங்குள்ள கி.மு3ம் நூற்றாண்டு கல்வெட்டில் "மதிரை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே மதுரையை பற்றி குறிப்பிடும் மிகவும் பழமையான கல்வெட்டாகும். இந்த தீப ஓட்டத்தை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் தொடங்கி வைத்தார்.
அதேநேரம், சமணர் படுகைகள் உள்ள, கீழக்குயில்குடியில் ராமசாமி, தென்பரங்குன்றத்தில் முத்தையா, குன்னத்தூரில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் அருண்சுந்தர் தயாளன், யானைமலையில் தமிழிசை அறிஞர் மம்முது ஆகியோர் தீபஓட்டத்தை தொடக்கி வைத்தனர்.
தீபத்தை ஏந்தி வந்தவர்கள், மதுரை யானைக்கல் அருகே வைகை ஆற்றில் உள்ள வசந்த மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர். இன்று காலை 8.30 மணிக்கு, மீனாட்சி அம்மன் கோயில், செயின்ட் மேரீஸ் சர்ச், கோரிப்பாளையம் தர்கா ஆகிய இடங்களில் இருந்தும் தீபங்கள் கொண்டு வரப்பட்டு, தமுக்கம் மைதானத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து இன்னிசை அரங்கம், நடன, நாட்டிய அரங்கங்கள் நடைபெறவுள்ளன.
தொடர்ந்து தொன்மையை போற்றுவோம் மற்றும் வைகையைப் போற்றுவோம் நிகழ்ச்சிகளும் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ளன.