மலேசியா: மாயமான மலேசிய விமானத்தை தேடும் குழுவினர்
இந்திய பெருங்கடலில் இருந்து 58 கடினமான பொருட்களை கண்டுபிடித்துள்ளனர்.
அது மலேசிய விமானத்தின் உதிரி பாகங்கள் தானா? என்று அறிய ஆய்வுக்கு
அனுப்பப்பட்டுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி நடுவானில் மாயமானது.
நடுவானில் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மாயமான அந்த விமானத்தின் கதி குறித்து இதுவரை எந்தவித உறுதியான தகவலும் இல்லை. அந்த விமானம், இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்ற யூகத்தின் பேரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையிலும் பலன் இல்லாமல் போனது. ஆனாலும், அந்த விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் குழுவினர், இந்திய பெருங்கடலில் 58 கடினமான பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். அந்த பொருட்கள் விமானத்தின் உதிரி பாகங்கள் தானா? என்பதை அறிய அந்த பொருட்களை ஆய்வுக்கு அனுப்ப உள்ளதாக ஆஸ்திரேலியா போக்குவரத்து துறை அமைச்சர் லியோ டியாங் லாய் தெரிவித்துள்ளார்.
மேலும், கண்டுபிடிக்கப்பட்டு உள்ள அந்த 58 பொருட்களும் இந்தியப் பெருங்கடல் கடற்படுகையுடன் தொடர்புடையதாக தெரியவில்லை எனபதினாலே இந்த பொருட்கள் மலேசிய விமானத்தின் உதிரி பாகங்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.