சென்னை: விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் நிலங்களை தமிழக அரசே பிடுங்குவது அவர்களை உயிருடன் கொலை செய்வதற்கு சமம் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள 1110 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.
அதற்கான ஏற்பாடுகளையும் வருவாய்த் துறையினர் முழுவீச்சில் தொடங்கியுள்ளனர். உழவர்களின் நலனையும், மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளாத இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழ்நாட்டில் 95 லட்சம் பேர் படித்துவிட்டு வேலை இல்லாமல் தவிக்கும் நிலையில், உற்பத்தியைப் பெருக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் அரசு மேற்கொள்ளும் நியாயமான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க வேண்டியது பொறுப்புள்ள குடிமக்களின் கடமை ஆகும். அதேநேரத்தில், ஒரு உயிரைக் காக்க இன்னொரு உயிரை பலியிடுவதைப் போன்ற பொறுப்பற்ற செயல்களில் அரசு ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில், விவசாயத்தை அழிக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபடுவதை அத்தகைய பொறுப்பற்ற செயலாகவே பார்க்கத் தோன்றுகிறது.
அரக்கோணம் வட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க முடிவு செய்துள்ள தமிழக அரசு, அதற்காக பணப்பாக்கம், துறையூர், நெடும்புலி, அகவலம், பெருவளையம், கன்னிகாபுரம், மோட்டூர் ஆகிய கிராமங்களிலுள்ள 926 ஏக்கர் பட்டா நிலங்களையும், 183.50 ஏக்கர் புறம்போக்கு நிலங்களையும் கையகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. நிலங்களைக் கையகப்படுத்துவது குறித்து உழவர்களிடம் கருத்துக் கேட்காத அதிகாரிகள், கடந்த 8ஆம் தேதி வேலூரில் நிலம் கையகப்படுத்தலுக்கான துணை ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி இம்முடிவை அறிவித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக அரக்கோணத்தில் தனி அலுவலகம் திறக்கப்பட்டிருக்கிறது. இதையறிந்து அரக்கோணம் பகுதி விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.
தமிழக அரசால் கையகப்படுத்தப்படவுள்ள 1110 ஏக்கரும் முப்போகம் விளையக்கூடிய பூமி ஆகும். காவிரிப் பாசனப் பகுதிக்கு இணையான நீர்வளம் இப்பகுதியில் காணப்படுகிறது. வட தமிழகத்தில் இவ்வளவு வளமையான நிலம் வேறு எங்கும் இல்லை என்பதுதான் உண்மையாகும். சென்னையின் அரிசித் தேவையில் குறிப்பிட்ட விழுக்காட்டை இப்பகுதிதான் நிறைவேற்றுகிறது. இதை உணராத அரசு அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி நிலங்களை பிடுங்குவதில் தீவிரம் காட்டுகிறது. வேலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் சிப்காட் தொழிற்பேட்டைகளை அமைப்பதற்காக மட்டும் 53 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிலம் எடுத்தல், மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்தல் சட்டத்தின்படி ஒரு குறிப்பிட்ட நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நில உரிமையாளரின் ஒப்புதலையும், கையகப்படுத்தப்படவுள்ள நிலம் உள்ள பகுதியின் கிராம அவையைக் கூட்டி அதில் பாதிக்கும் மேற்பட்டோரின் ஒப்புதலையும் பெற வேண்டியது அவசியமாகும். அதுமட்டுமின்றி, விளைநிலங்களை கையகப்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும் என்றும், ஒருவேளை தவிர்க்க முடியாமல் விளைநிலங்களைக் எடுக்க வேண்டும் எனில், அதற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.
கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு சந்தை மதிப்பில் 4 மடங்கு விலை தர வேண்டும் என்பதும், சட்டத்தின் முக்கிய அம்சமாகும். ஆனால், மத்திய அரசு நிறைவேற்றிய நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் எந்த அம்சத்தையும் பயன்படுத்தாமல் வளமான விளைநிலங்களை அடிமாட்டுக்கு தட்டிப்பறிக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. இதற்காகவே, மத்திய அரசு சட்டத்தின் அம்சங்களில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு பெறுவதற்கான சட்டத்திருத்தத்தை கடந்த 20.02.2014 அன்று சட்டப்பேரவையில் அ.தி.மு.க. அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது. இதன்மூலம், தனியார் முதலாளிகளுக்கு சாதகம் செய்வதற்காக கிழக்கிந்திய கம்பெனியை விட மிக மோசமான முறையில் உழவர்களை தமிழக அரசே சுரண்டுகிறது.
ஏற்கனவே, வறுமையும், கடன் தொல்லையும் தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில் உழவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் நிலங்களை அரசே பிடுங்குவது அவர்களை உயிருடன் கொலை செய்வதற்கு சமமானதாகும். எனவே, விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களை தட்டிப்பறிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Courtsy-vikadan