அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் 17-வது மாநில மாநாடு.

Saturday, February 9, 2013

பிப்ரவரி 23,24,25 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் 17-வது மாநில மாநாடு சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச்செயலாளர் பிஸ்வாஸ் தலைமை வகிக்கிறார். அகில இந்திய தலைவர் வேலப்பன் நாயர் முன்னிலை வகிக்கிறார்.தமிழ் மாநில பொதுச்செயலாளரும் உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கதிரவன் மற்றும் அமைப்பின் முன்னனி நிர்வாகிகள் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள்.தமிழகம் மற்றும் பல மாநிலங்களிலும் இருந்து பல்லாயிரக்கான தொண்டர்களும் வர இருக்கிறார்கள்.


சிறப்பு பார்வை : இது பற்றிய மக்களின் கருத்துக்களை கேட்ட பொழுதுநேதாஜியும் பசும்பொன் அய்யாவும் வளர்த்த கட்சியில் தேவரினஅமைப்புகள் ஒன்றினைந்து வேறுபாடு காணமல் செயல்பட்டால்நாம் இழந்த அதிகாரத்தை அடையலாம் என்றனர்.நேதாஜிக்காக உயிரையும் கொடுக்கத்துணிந்த தேவரின மக்கள் மத்திய, மாநில அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் இம்மாநாட்டில் அனைத்து தேவரின அமைப்புகளும் ஒன்றினைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து வெற்றி பெற வேண்டும்
என்று கூறினர்.

அப்பொழுது தான் தங்களுடைய சமூகத்திற்கு தேவையான இடஒதுக்கீடு கிடைக்கும் என்றும் தங்களது ஆதங்கமான கருத்துகளை கூறிகின்றனர்.மேலும் இந்திய விடுதலைக்காக தங்கள் உயிர் உடமைகளை இழந்து ஆண்ட மண்ணிலேயே அகதிகளாக வாழும் நிலை வந்தது மேலும் காவல்துறையினரால் பொய்வழக்கு போடபட்டு வாழ்க்கை சீர் கெடுகின்றது என்றனர். மேலும் முக்குலத்து மக்கள் திராவிட கட்சிகளுக்கு துணை போகின்ற அவலநிலையை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்றும் தங்களது ஆழ் மன கருத்துக்களை கூறினர். தேவர் குருபூஜையில் நடந்த வன்முறையில் நடந்ததை யாரும் கண்ட கொள்ளவில்லை என்றும், கண்டித்தவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததை கண்டிக்கின்றோம் என்றும், தீண்டாமை வன்கொடுமை சட்டத்தை நீக்க வேண்டும் என்றும், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் அய்யா பெயரை சூட்ட வேண்டும் என்றும், தேவர் குருபூஜையில் நடந்த
வன்முறையில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தக்க தண்டனை அளிக்க வேண்டும் என்றும், முக்குல தலைவர்கள் முடிந்தால் ஓரணியில் நின்று உதவுங்கள் , அரசியல் சுயலாபத்திற்காக எங்களை பிரிக்காதீர்கள்… என்று தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.

                                                                                                                                                       courtsy-devartv