முக்குல உறவுகளுக்கு மாமன்னர் சதயவிழா வாழ்த்துக்கள் !

Thursday, October 25, 2012

நம் இந்தியாவை பல அரசர்களும் , பல சக்கரவர்த்திகளும் ஆண்டனர் அவர்களுள் குறிப்பிடும் படி சொல்வது நம் குல சக்கரவர்த்தி " ராஜராஜசோழன்  தேவரை  " குறிப்பிட்டு சொல்லலாம்.


அவர் கண்ட வெற்றிகளும் பல , வென்ற நாடுகளும் பல அதில் இலங்கையும் அடக்கம், அவரது ஆட்சி காலம் தமிழகத்தின் பொற்காலம் என்றே சொல்லலாம், இப்போது கூறப்படும் கடற்படை இவரது ஆட்சி காலத்திலேயே உருவானது.

 இவர் பெற்ற பட்டங்கள் ஏராளம் அவற்றில் சில " இராஜராஜனின், மும்முடிச் சோழன், செயங்கொண்டான், அருண்மொழி தேவன்  என்ற பெயர்கள் நகரங்களின் பெயர்களாக மாறியதோடு, வளநாடுகளும் மண்டலங்களும், நம் மன்னனின் பெயராலேயே அறியப்பட்டன. இப்பெயர்களுடன் சோழேந்திர சிம்மன், சிவபாத சேகரன், க்ஷத்திரிய சிகாமணி, சனநாதன், நிகரிலிச் சோழன், இராஜேந்திர சிம்மன், சோழ மார்த்தாண்டன், இராஜாசிரயன், இராஜ மார்த்தாண்டன், நித்திய விநோதன், பாண்டிய லோசனி, கேரளாந்தகன், சிங்களாந்தகன், இரவிகுலமாணிக்கம் தெலிங்க குல காலன் போன்ற பல பட்டங்களும் அடங்கும்,

உறவுகள் அனைவர்க்கும் " மருது தொலைக்காட்சியின் இனிய மாமன்னரின்  சதய விழா  வாழ்த்துக்கள் ", இனி வரும் காலங்களில் நம் முன்னோர்களின் விழா அரசு விழாவாக அறிவிக்க நாம் குரல் கொடுப்போம்,முக்குலம் என்பதில் பெருமை கொள்வோம் நாம் அனைவரும்..