காந்தியை " தேசதந்தை " என்று அழைக்க இந்திய அரசியல் சட்டத்தில் இடமில்லை !

Friday, October 26, 2012

தேசதந்தை என்று மஹாத்மா காந்தியை அழைக்க இந்திய அரசியல் சட்டத்தில் இடமில்லை என தகவல் அறியும் உரிமை சட்டம் தெரிவித்துள்ளது.

லக்னோவை சேர்ந்த ஐஷ்வர்யா பராஷர் என்ற மாணவி மஹாத்மா காந்தி பற்றி விவரங்கள் தேடி வந்துள்ளார். அப்போது அவருக்கு மஹாத்மா காந்தியை தேச தந்தை என்று அழைக்கப்பட வேண்டிய காரணங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் எழுந்தது..

இதனை அறிய அவர் தேசத்தந்தை என்று காந்தியை குறிப்பிடும் காரணங்கள் தேட தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதன் படி இந்திய அரசியல் சட்டத்தில் கல்வித்துறை மற்றும் ராணுவம் தவிர மற்ற துறையினருக்கு எந்த வித சிறப்புப் பெயரும் வழங்கும் உரிமை இல்லை என்று தெரியவந்தது.

உடனடியாக ஐஸ்வர்யா பராஷர் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு எழுதி மகாத்மா காந்தி தேசத் தந்தை என்று அறிவிக்கை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தனது கோரிக்கை என்னவானது என்று மீண்டும் அந்தச் சிறுமி தகவலறியும் உரிமைச் சட்டத்தை நாடினார். இவரது இந்த மனு உள்துறை அமைச்சகத்திற்கு விளக்கம் அளிக்க அனுப்பப்பட்டது.

அப்போதுதான் இந்திய அரசியல் சட்டத்தின் படி மகாத்மா காந்திய தேசத் தந்தை என்று அழைக்கும் சிறப்புப் பட்டத்தை அரசு தர முடியாது என்பது தெரியவந்துள்ளது