ரயில்வே பாதையில் தலையில்லா பிணம் மீட்பு !

Monday, September 3, 2012

புதுடில்லி : டில்லியின் கிழக்குப்பகுதியில் உள்ள பாண்டவ் நகர் பகுதியில் உள்ள ரயில்வே பாதையில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 போலீசார் நடத்திய விசாரணையில் அவன் கல்லூரி மாணவன் பாராஸ் பாஷின் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பாஷினின் தந்தை சஞ்சீவ் பாஷின் கூறியதாவது, சனிக்கிழ‌மை மதியம் 03.30 மணியளவில் பாராஸ் வெளி‌யே சென்றதாகவும், மாலை 04.15 மணியளவி்ல், தனது மொபைலுக்கு அழைப்பு வந்தது. அதில் தங்கள் மகன் மர்மநபர்களால் அடித்துக் கொ‌லை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கும்போது, தலை துண்டிக்கப்பட்டு, உடல் ரயில்வே பாதையில் போடப்பட்டிருந்தது. இதுகுறி்த்து போலீசிடம் புகார் அளித்தோம். போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அவ்வுடலை, லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்