சுஷ்மாவை சந்தி்க்கிறார் சோனியா !

Saturday, September 1, 2012

புதுடில்லி : பார்லிமென்ட் முடக்கத்திற்கு தீர்வு காணும் பொருட்டு, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜை, காங்கிரஸ் க்ட்சி தலைவர் சோனியா சந்தி்த்துப் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ள முறைகேடு தொடர்பாக பிரதமர் பதவி விலக வேண்டும், மேலும் அவர் அனுமதி அளித்துள்ள 142 நிலக்கரி சுரங்கங்களின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பார்லிமென்ட் தொடர்ந்து 8 நாட்களாக முடக்கியுள்ள நிலையில், இவ்விவகாரத்திற்கு தீர்வு காணும் பொருட்டு, பா.ஜ. மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜை, காங்கிரஸ் தலைவர் சோனியா சந்தி்த்துப் பேச உள்ளதாக டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.