ஈரோடு பஸ்நிலையத்தில் நேற்று மாலை மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி சார்பில் அதிமுக ஆட்சியின் ஓராண்டு சாதனைப் பேரணி நடந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் ஈரோடு கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டார். முன்னதாக மேயர் மல்லிகா பரமசிவம் அங்கு காரில் சென்று இறங்கினார். அப்போது அங்கு நின்றிருந்த கொடுமுடி ஒன்றியக் குழு உறுப்பினர் விஜயலட்சுமியைப் பார்த்து, ‘என்னை பற்றி ஏன் அவதூறாக பேசினாய்?’ என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் மல்லிகாபரமசிவமும், விஜயலட்சுமியும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது அங்கு வந்த அமைச்சர் ராமலிங்கம் அதிர்ச்சி அடைந்தார். இருவரையும் அழைத்து ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ய முயன்றார். இதில் சமரசம் ஏற்படவில்லை.
மீண்டும் வெளியே வந்த மேயர், கொடுமுடி பகுதி கட்சி நிர்வாகிகளையும் அவதூறாக பேசி திட்டியுள்ளார். இதைக் கேட்டு அங்கிருந்த கொடுமுடி பகுதி நிர்வாகிகள் ஆத்திரம் அடைந்து மேயரிடம் தட்டிக் கேட்டனர். அப்போதும் வாக்குவாதம் முற்றி இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது. அப்போது வெளியே வந்த அமைச்சர் ராமலிங்கம், ‘உங்கள் பிரச்னையை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கோபத்துடன் கூறிவிட்டு காரில் ஏறிச் சென்று விட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.