ஈரோடு பஸ்நிலையத்தில் நேற்று மாலை மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி சார்பில் அதிமுக ஆட்சியின் ஓராண்டு சாதனைப் பேரணி நடந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் ஈரோடு கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டார். முன்னதாக மேயர் மல்லிகா பரமசிவம் அங்கு காரில் சென்று இறங்கினார்.