தமிழக அரசு டிரைவர்களுக்கு லைசன்ஸ் வழங்குவது கொலை செய்வதுதான் என்று 25ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது.
இந்த செய்தி தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அதனால், இந்த செய்தி வெளியிட்ட பத்திரிகை பதிப்பாளர் சந்தான கோபால், ஆசிரியர் சுனில்நாயர், நிருபர் கார்த்திகேயன் ஹேமலதா ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 500ன் கீழ் (அவதூறு பரப்புதல்) நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென கூறி முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.