கருணாநிதிக்கென தனியாக "டிவிட்டர் - பேஸ்புக்" !

Wednesday, August 15, 2012

சென்னை :

சுதந்திர தினமான இன்று முதல் இளைய தலைமுறையினர் அதிக அளவில் ஆர்வமுடன் பயன்படுத்தும் சமூக வலைதளங்களான ‘Twitter' - 'facebook' ஆகியவற்றில் "www.twitter.com\kalaignar89" என்ற பெயரில் ‘Twitter' யிலும், “www.facebook.com\kalaignar89" என்ற பெயரில் ‘facebook' யிலும், கருணாநிதி பெயரில் வலைப்பக்கமும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப் பக்கத்தில் கருணாநிதியின் கடிதங்கள், அறிக்கைகள், கவிதைகள், உரைகள், பேட்டிகள் ஆகியவை இடம் பெற உள்ளன. மேலும், கருணாநிதிக்கென தனிப்பட்ட இணையதளம் www.kalaignarkarunanidhi.comஉருவாக்கப்பட்டு வருகிறது. அந்த இணையதளம் முரசொலிமாறனின் 79வது பிறந்த நாளான ஆகஸ்ட் 17ம் தேதியன்று தி.மு.க தலைவர் கருணாநிதியால் துவக்கப்பட உள்ளது இவ்வாறு திமுக செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.