சிப்பாய் புரட்சி நாளை மறந்த அமைச்சர்கள்,அதிகாரிகள்: வாழ்க தேச பற்று ?

Wednesday, July 11, 2012

இன்றைய சுதந்திர இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட முதல் புரட்சி 1806 ஆண்டு ஜூலை 10 தேதி வேலுரில் நடைபெற்றது,வேலுர் கோட்டையில் ஆங்கிலேயருக்கு எதிராக நடந்தததுதான் சிப்பாய் கலகம்.சுதந்திர போராட்டத்தின் முதல் வித்து இங்குதான் விதைக்கப்பட்டது என்பது வரலாறு,மறுக்க முடியாத உண்மை.



புரட்சி எதனால் ஏற்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்,அன்றைய சிப்பாய் கலகத்தில் ஆயிரக்கனக்கான வீரர்கள் அதிகாயில் உறக்கத்தில் இருந்தபோது கொல்லப்பட்டனர்,பலர் அகழியில் முதலைகளுக்கு இறையாக்கபட்டனர்.

அன்று கொல்லபட்ட ஆங்கிலலேய அதிகாரிகள் உடல்கள் கோட்டைக்கு எதிரே அடக்கம் செய்யபட்டு இன்றும் பாராமரிக்கபட்டு வருகிறது,
நமது வீரர்களின் உடல்கள் ஒரு கிணற்றில் வீசபட்டதாக தகவல்களும் உண்டு.உயிர் நீத்த வீரர்களுக்கு நினைவாக நினைவு சின்னம் எழப்படவில்லை என்ற செய்தி பல செய்திதாள்களில் வந்தவண்ணம் இருந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் வேலுர் மக்கான் பகுதியில் நினைவு சின்னம் திறக்கபட்டது.

2006 ஆண்டு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது.இந்நிலையில் இன்று பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் நினைவு சின்னத்திற்க்கு வந்து மரியாதை செலுத்தினார்கள்.

வேலுர் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் விஜய்,முகமது ஜான் ஆகியோர் கடைசிவரை மரியாதை செலுத்த வரவில்லை,மாவட்ட ஆட்சியர்,மாவட்ட நிர்வாகம் வெறும் சம்பிரதாய நிகழ்சியாக கூட இதனை ஏற்பாடு  செய்யவில்லை,முன்பு அரசின் சார்பில் இதற்கான விழா சிறப்பாக ஏற்பாடு செய்யபட்டு நடத்தபடும்.அரசியலுக்கு அப்பற்பட்ட அதிகாரிகள் இதனை மறந்தது ஏனே?
இந்திய ஜனநாயம் வாழ்க.!