மாற்று திறனாளியை ஒதுக்கிய காப்பகம் , கை விட்ட அரசு .!

Thursday, July 12, 2012

''காப்பாற்றவும் முடியவில்லை, உதவித்தொகையும் கிடைக்கவில்லை, மாற்றுத்திறனாளியான எனது மகளை கருணை கொலை செய்து விடுங்கள்'' எ‌ன்று ஈரோடு மாவ‌ட்ட கலெக்டரிடம் ஒரு தாய் கண்ணீ‌ருடன் மனு அ‌ளி‌த்து‌ள்ளது ந‌ம் நெ‌ஞ்சை ‌அ‌திர வை‌க்‌கிறது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த அழக‌ர்சா‌மி - ஜெயா த‌ம்ப‌தி ஈரோடு சூரம்பட்டியில் கடந்த 7 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறா‌ர்க‌ள். அழகர்சாமி தச்சுவேலை செய்து வருகிறார். இவ‌ர்களுக்கு மதுமிதா (14), மித்ரா (5), ஆகிய 2 மகள்கள். மதுமிதாவுக்கு பிறந்ததில் இருந்தே மூளை வளர்ச்சி இல்லாமல் கை, கால் செயல் இழந்து வாய் பேச முடியாமல் போய்விட்டது.

தன்னை சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே அவளுக்கு தெரியாது. நாளடைவில் அவளுக்கு இதெல்லாம் சரியாகி விடும் என்று நினை‌த்த தா‌ய் ஜெயா, செய்யாத வைத்தியம் இல்லை. பார்க்காத டாக்டர் இல்லை. இந்த நிலையில் மது‌மிதா வயதுக்கும் வந்து விட்டாள்.

‌மதுமிதா படு‌ம் வேதனையை தா‌ங்‌கி‌க் கொ‌ள்ள முடியாத ஜெயா, ஈரோ‌ட்டி‌ல் உ‌ள்ள மா‌ற்று‌த்‌திறனா‌கி‌க‌ள் கா‌ப்ப‌க‌த்த‌ி‌ல் சே‌ர்‌‌க்க செ‌ன்று‌ உ‌ள்ளா‌ர். ஆனா‌‌ல், கா‌ப்பக‌‌‌ம் மது‌மிதாவை சே‌ர்‌க்க மறு‌த்து‌வி‌ட்டது. தஞ்சாவூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தி‌ற்கு‌ம் மகளை கொ‌ண்டு செ‌ன்று‌ள்ளா‌ர். அவ‌ர்களு‌ம் சேர்த்துக்கொள்ள மறுத்து விட்டன‌ர்.

கை, கால், செயல் இழந்து படுத்த படுக்கையாக பேச முடியாதவர்களை சேர்க்க முடியாது என்று கூறிவிட்டது கா‌ப்பக ‌நி‌ர்வா‌க‌‌ம். ச‌ரி! அர‌சி‌ன் உத‌வி‌த்தொகை கே‌ட்டு விண்ணப்பித்து‌ள்ளா‌ர் ஜெயா. 3 மாதத்துக்கு ஒருமுறை அந்தப்பண‌த்‌தை வை‌த்து மகளை கவ‌னி‌க்க படாதபாடுப‌ட்டா‌ர்.

இ‌ப்படி க‌ஷ்ட‌ங்களை அனுப‌வி‌த்து வ‌ந்த ஜெயாவு‌க்கு பே‌ரிடியாக, 4 மாதங்கள் ஆகியும் இன்னும் உத‌வி‌த் தொகை வரவில்லை. மது‌மிதாவை வீட்டில் விட்டு விட்டு எங்கும் செல்லமுடியாத ‌நிலை ஜெயாவு‌க்கு. தா‌ன் யாரு எ‌ன்றே தெ‌ரியாதவராக இரு‌க்கு‌ம் மது‌மிதா, இரவில் ஓயாமல் அழுது கொ‌ண்டே இரு‌க்‌கிறா‌ர். இதனால் வீட்டை காலி செய்யுங்கள் என்று வீட்டு உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.

தச்சு வேலை செய்து கணவ‌ர் சம்பாதிக்கும் பணத்தில் குடும்பத்தை நடத்த க‌ஷ்ட‌ப்ப‌டு‌ம் ஜெயா, எப்படி மது‌மிதாவை பாதுகாக்க முடியும் எ‌ன்று வேதனை‌ப்ப‌‌ட்டு‌ள்ளா‌ர். வேறு வழியில்லாமல் நாங்கள் இரண்டு பேரும் இறந்துவிடலாம் என்று கூடி நினை‌த்து‌ள்ளா‌ர் ஜெயா. ஆனால் அவ‌ர்க‌ளி‌ன் சாவை இன்னொரு மக‌ள் ‌மி‌‌த்ரா தடு‌த்து‌வி‌ட்டா‌ர். மகளு‌க்காக வாழ வே‌ண்டு‌ம் தனது முடிவை மா‌ற்‌றி‌க் கொ‌ண்டா‌ர் ஜெயா.

இ‌ப்படி ‌தின‌ம் ‌தின‌ம் வேதனையை அனுப‌வி‌த்து வ‌ந்த ஜெயா, ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அ‌ண்மை‌‌யி‌ல் நடந்தது. தள்ளுவண்டியில் தனது மக‌ள் மது‌மிதாவை வை‌த்து‌க தள்ளிக்கொண்டே அழுது கலெக்டர் சண்முகத்திடம் கோரிக்கை மனு வழங்கினா‌ர். அ‌ந்த மனுவை படி‌த்து வா‌ர்‌த்த கலெ‌க்ட‌ர், அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்தா‌ர். காரண‌ம், ''மக‌ள் மது‌மிதாவை கருணை கொலை செய்துவிடுங்கள்'' எ‌ன்று கூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ர்.

பெற்றத் தாயே மாற்றுத்திறனாளி மகளை கருணை கொலை செய்ய கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மனு கொடுக்க வந்த மற்ற பெண்களும் மது‌மிதா‌வி‌ன் ‌நிலைமை பார்த்து க‌ண்‌ணீ‌ர் வடி‌த்து‌ள்ளன‌ர். ஆனால் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் மதுமிதா சுற்றும் முற்றும் பார்த்த படியே இரு‌க்‌கிறா‌ர்.