திருப்பூர் : லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் பெண்கள் அதிகளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர் கிரண்பேடி கூறியுள்ளார். திருப்பூரில் நடைபெற்ற எழுச்சிமிகு இந்தியா என்ற நிகழ்ச்சியில் சமூக ஆர்வலரும், அன்னா குழு உறுப்பினருமான கிரண் பேடி கலந்துகொண்டார். அவர் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கலந்துரையாடினார்.