திருப்பூர் : லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் பெண்கள் அதிகளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர் கிரண்பேடி கூறியுள்ளார். திருப்பூரில் நடைபெற்ற எழுச்சிமிகு இந்தியா என்ற நிகழ்ச்சியில் சமூக ஆர்வலரும், அன்னா குழு உறுப்பினருமான கிரண் பேடி கலந்துகொண்டார். அவர் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது, லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் பெண்கள் அதிகளவில் கலந்துகொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதாரத்திற்கு இழப்பு ஏற்படுத்தும் வகையிலான குற்றங்களுக்கான தண்டனைகள், அரசின் கொள்கை முடிவுகளில் மட்டு்மே இருக்கிறதேயன்றி, செயல்பாட்டு அளவில் இல்லை என்று அவர் கூறினார்.