சாலமோன் தீவில் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை.

Wednesday, February 6, 2013

பசிபிக் பெருங்கடலில் உள்ள சாலமோன் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது‌. இதனால், அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது‌.

பசிபிக் கடல் பகுதிகளில் அவ்வப்போது கடலுக்கடியில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று‌தான். இந்நிலையில், இன்று காலை பசிபிக் கடல் பகுதியான சாலமோன் தீவில் கடலுக்கு அடியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிகளாக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் அந்தப்பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து‌ இது‌வரை தகவல் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேஷியா, பிஜி தீவுகள் ஆகிய பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து‌ வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.