பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்துகொண்ட மாநாடு நேற்று டெல்லியில் நடைபெற்றது.
இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் 40 துணைவேந்தர்கள் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் உரையாற்றிய போது, பெரும்பாலான இந்திய பல்கலைக்கழகங்கள் உலக அளவில் சிறப்பான இடத்தை பெறவில்லை.
மேல் படிப்புக்கான எமது பல்கலைக்கழகங்கள் திறம்பட செயற்படவில்லை என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். இந்த பல்கலைக்கழங்கள் அநேக பட்டங்களை வழங்கி வந்தாலும் அதற்கு உலக அளவில் வரவேற்பில்லை.
இன்று உலக அளவில் உள்ள 200 சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இந்திய பல்கலைக்கழகங்கள் எதுவும் இல்லை என்று சொல்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இன்று உலகில் பல்வேறு சவால்கள் உள்ளன. அதேபோல் புதிய புதிய வாய்ப்புகளும் காத்திருக்கின்றன.
எனவே நம் நாட்டின் உயரிய கல்வியை சிறப்பான இடத்திற்கு கொண்டுவர சீர்திருத்தங்கள் வேண்டும். இந்த 21-ம் நூற்றாண்டில் கல்விதான் நாட்டை நவீனமாயமானதாகவும், சமூக பொருளாதாரத்தில் வளத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டுவரும்.
எனவே நாட்டில் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவது என்பது மிகவும் அவசியமாகிறது இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசுகையில், உயர் கல்வித்துறையில் தனியார் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டியது அவசியம்.
அதற்காக நமது சமூகக் கடமைகளை ஒருபோதும் காற்றில் பறக்கவிடக்கூடாது. தரமான கல்வி வழங்கப்படுவதற்கு உரிய கொள்கைகள் வகுப்பதை பல்கலைக்கழகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.
இத்தகைய கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் மத்திய பல்கலைக்கழகங்கள் முக்கிய பங்காற்ற முடியும். இப்போதைய சூழலில் உயர் கல்வியில் தனியார் பங்கேற்பு மிகவும் அவசியமானதாகும். அதேசமயம் அது சுயேச்சையாக மிகச் சிறந்த நிர்வாகத்தின் கீழ் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் திறமையானவர்களைக் கண்டறிந்து ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பணியில் ஈடுபடுத்துவதில் உயர் கல்வி நிறுவனங்களுக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. இப்போது நம் முன்பாக உள்ள மிகப் பெரும் சவாலே அறிவியல் ஆய்வுகளை ஊக்குவிப்பதுதான் என்று கூறினார்.