நடிகர் சூர்யா நடிக்கும் சிங்கம்2ல் இஸ்லாமியர்களுக்கெதிரான காட்சிகள் இருக்கிறமையால் அதை நீக்கக்கோரி தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது தான் விஸ்வரூபம் பிரச்னை முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் இஸ்லாமிய அமைப்புகள் போர் கொடி தூக்கியுள்ளன.
இம்முறை ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் சிங்கம் 2 படத்தில் இஸ்லாமியர்கள் கடற்கொள்ளையர்களாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக அவ்வமைப்பு புகார் கூறியுள்ளது.
எனவே காட்சிகளை வெட்டும் படி தோழமையுணர்வுடன் கூறுவதாக அவ்வமைப்பு மாநில செயலர் முகம்மது ஷிப்லி தெரிவித்துள்ளார். இதுபோன்ற மதஉணர்வுகளை தூண்டும், புண்படுத்தும் வகையிலான காட்சிகளை தமிழ் சினிமா எடுக்கும் பட்சத்தில் அந்த காட்சிகளை நீக்கியபின்னரே தணிக்கை சான்றிதழ் வழங்கவேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.