பேஸ்புக், டிவிட்டர், இணையதளங்களில் இணைந்து கட்சிக் கொள்ளைகளைப் பரப்ப பாமக முடிவு-அன்புமணி.

Monday, February 4, 2013

 சென்னை: பேஸ்புக், டிவிட்டர், இணையதளங்களில் இணைந்து கட்சிக் கொள்ளைகளைப் பரப்ப பாமக முடிவு செய்துள்ளதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 
 
சென்னை மேற்குமாம்பலம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அன்புமணி ராமதாஸ், வருங்காலத்தில் இணைய தளங்கள் வழியாக பா.ம.க.வின் கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து விழிப்புணர்வு எற்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இன்றைக்கு இளைய தலைமுறையினர் இணைய தளம் மற்றும் மொபைலுடன் தான் இருக்கிறார்கள். எனவே கருத்துக்கள் பரிமாற்றத்துக்காக 4 லட்சம் இளைஞர்களின் ‘டேட்டா ஆப் பேஸ்' தயாரித்து இருக்கிறேன். இதை 10 லட்சமாக உயர்த்த முடிவு செய்து உள்ளேன் என்றார். 
 
உலக அளவில் சமூக வலைத்தளங்கள், இணையங்கள் மூலம் பல புரட்சிகள் நடந்து வருகின்றது. தமிழகத்தில் கூட கடந்த தேர்தலில் புதிய வாக்காளர்கள் இணைய தளம் மூலம் கருத்துக்கள் பரிமாறியதால் தேர்தலில் மாற்றத்தை உருவாக்கினார்கள்.. இதன் மூலம் பொது மக்களிடம் ஆதரவு திரட்டப்படும் தர்மபுரி பிரச்சினையில் ஊடகங்கள் பா.ம.க.வுக்கு எதிராக செயல்படுகின்றன. ஆனால் உண்மை நிலை வேறு. 85 சதவீத மக்கள் பா.ம.க.வுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இனி நாமும் கட்சிக்காக "டுவிட்டர்" "பேஸ்புக்", "பிளாக்" உருவாக்க முடிவு செய்துள்ளோம். பா.ம.க. பற்றிய எதிர் கருத்துக்களை முறியடிக்கும் வகையில் உடனடியாக இந்த சமூக வலை தளம் மூலம் பதில் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.