அரசின் விலையில்லா பொருட்களை புறக்கணித்த மக்கள்.

Monday, February 4, 2013

காஞ்சிபுரம் அருகே அரசின் விலையில்லா பொருட்கள் மிக்சி, கிரைண்டர் பெறுவதற்கு அதிமுகவினர் பணவசூல் செய்வதாகக் கூறி கிராமவாசிகள் பொருட்களை வாங்காமல் புறக்கணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்டது தண்டலம் கிராமம்‍. இக்கிராமத்தின் அதிமுக ஊராட்சி மன்றத்தலைவர் மூர்த்தி மற்று‌ம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்‌, அரசின் விலையில்லா பொருட்களான மிக்சி,பேன், கிரைண்டர்‌களை வழங்குவதற்கு தலா ஓருவரிடம் 150 ரூபாய் பணம் வசூல் செய்து‌ள்ளனர். இதனால் விலையில்லா பொருட்களை வாங்க கிராமவாசிகள் புறக்கணித்தனர்‍. இதனால் அங்கு சிறிது‌ நேரம் பரபரப்பு ஏற்பட்டது‌.

அரசால் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட பொருட்களைப் பெறுவதற்கு கூட பணம் செலுத்திப்பெற வேண்டிய து‌ரதிஷ்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தண்டலம் கிராமமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்‍. இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்‍.

                                                                                                                                                       courtsy-captan news