டீசல் விற்பனை மீதான எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம் ஈடு செய்யப்படும் வரை, மாதந்தோறும் டீசல் விலை லிட்டருக்கு 40 முதல் 50 காசுகள் உயர்த்தப்படும் என்று பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். மறுஅறிவிப்பு வரும் வரை மாதா மாதம் டீசல் விலையை 50 காசுகள் வரை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் மொய்லி இன்று கூறினார்.
டீசல் மீதான தனது கட்டுப்பாட்டை பகுதி அளவில் விலக்கிக் கொள்வதாக கடந்த மாதம் 17-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. சிறிய அளவில் மாதந்தோறும் டீசல் விலையை உயர்த்திக் கொள்ளும் அதிகாரம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டது.
இப்போது சர்வதேச சந்தை விலையுடன் ஒப்பிடும்போது டீசல் விலையில் லிட்டருக்கு 10 ரூபாய் 80 காசுகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இரட்டை விலைக் கொள்கை அடிப்படையில் ரயில்வே, ராணுவம், மாநில போக்குவரத்து கழகங்கள் போன்ற மொத்த கொள்முதல் செய்வோருக்கு டீசல் விலை மீதான மானியம் அடியோடு ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், மறுஅறிவிப்பு வரும் வரை மாதம் தோறும் 40 முதல் 50 காசுகள் வரை டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தும் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
courtsy-puthiyathalaimurai.