புது தில்லியில் தன்னை காதலித்து கைவிட்ட பெண்ணை, அடித்துக் கொன்ற காதலன், அவனுடன் வந்த ஆண் நண்பரையும் கடுமையாக தாக்கியுள்ளான்.
புது தில்லியில் மாணவி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து நடந்து வரும் போராட்டங்களும், பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோஷங்களும் புதிய குற்றங்களை தடுத்து நிறுத்தாது என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
நேற்று இரவு பணி முடிந்து காரில் வந்து கொண்டிருந்த நேஹா யாதவ் மற்றும் கௌரவ் குமாரை தடுத்து நிறுத்திய நேஹாவின் முன்னாள் காதலன் தேவேந்தர், இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளான். இதைப் பார்த்ததும் கார் ஓட்டுநர் அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் அளித்து இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வரும் வழியிலேயே நேஹா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.