நரமாமிசம் சாப்பிட்ட தேயிலை தொழிலாளர்கள்

Tuesday, January 1, 2013

அசாமில் தீயிட்டு கொளுத்தப்பட்ட தேயிலை தோட்ட உரிமையாளர்களின் நரமாமிசத்தை சாப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அசாம் மாநில திப்ருகர் பகுதியில் தேயிலை தோட்ட உரிமையாளர் மிருதுள்குமாரும், அவரது மனைவி ரீட்டாவும் சமீபத்தில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து நடந்த இந்த சம்பவத்தில் கைதான 15 பேரில் இரண்டு பேர் அளித்த சாட்சியத்தின்படி, இருவரும் தீயிட்டுக் கொலை செய்தும், கொலை வெறி தனியாத சிலர், அவர்களது மாமிசத்தையும் ஆத்திரத்தோடு தின்றதாகக் கூறியுள்ளர்.இவர்களது சாட்சியின்படி, நரமாமிசம் தின்றதாகக் கூறப்படுபவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.