சிதம்பரத்தில் டாஸ்மாக் மதுக் கடையை மூடக் கோரி போராடிய இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கைது செய்துள்ளனர்.
தமிழக இளைஞர் முன்னணி சார்பில் இன்று டாஸ்மார்க் கடையை இழுத்துப் பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்காக, மேலரதவீதியில் இருந்து தமிழக இளைஞர் முன்னணி சார்பில் துணைப் பொதுச் செயலாளர் அ. குபேரன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர், பேருந்து நிறுத்தத்துக்குள் அமைந்துள்ள மதுபானக் கடைக்கு
ஊர்வலமாக வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அவர்கள் மீது தடியடி நடத்தினர். அப்போதும் அவர்கள் கலைந்து செல்லாததால், அனைவரையும் கைது செய்து சிதம்பரம் நகர காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.