வீடு புகுந்து பெண்ணை கற்பழித்த காங்கிரஸ் தலைவர்.

Friday, January 4, 2013

அசாமில் திருமணமான பெண்ணொருவரை கற்பழித்த காங்கிரஸ் பிரமுகருக்கு தர்ம அடி கிடைத்தது.

சிராங் மாவட்டத்தில் காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவரான விக்ரம் சிங் பிரம்மா, நேற்று முன்தினம் இரவில் வீடு புகுந்து பெண் ஒருவரை கற்பழித்து விட்டார். நேற்று காலையில் இந்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போது அந்த வழியாக வந்த விக்ரம் சிங்கை பொதுமக்கள் முற்றுகையிட்டு தாக்க தொடங்கினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பொலிசார் கும்பலில் சிக்கிய காங்கிரஸ் பிரமுகரை மீட்டு போலிஸ் நிலையம் அழைத்து சென்றனர். பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் கணவர் அளித்த புகாரை அடுத்து காங்கிரஸ் பிரமுகர் பிரம்மா கைது செய்யப்பட்டார்