கேரளாவில் 15 வயது மாணவியை கற்பழித்துக் கொலை செய்தவருக்கு கேரள செசன்ஸ் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.
டெல்லியில் கல்லூரி மாணவி கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கேரள செசன்ஸ் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் 15 வயது நிரம்பிய 10-ஆம் வகுப்பு மாணவியான ஆரியா, திருவனந்தபுரத்தை அடுத்த வட்டப்பாறை பகுதியைச் சார்ந்தவர். சம்பவம் நடந்த அன்று ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ், தனது ஆட்டோ பழுதாகி நின்றுவிட்டது. ஆகவே அதை சரி செய்ய சில உபகரணம் வேண்டும் என்று ஆரியாவின் வீட்டில் சென்று கேட்டார்.
அந்த சமயம் பார்த்து வீட்டில் யாரும் இல்லை, ஆரியா மட்டும் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட ராஜேஷ், மாணவி ஆரியாவைக் கற்பழித்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு ஓடிவிட்டார்.
அப்போது அவர், மாணவி அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பறித்துச் சென்று விட்டார். கடந்த 2012, மார்ச் மாதம் 6-ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தை விசாரித்த செசன்ஸ் நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்த ஒரே மாதத்தில் விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளி ராஜேஷ்க்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை விதித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தீர்ப்பைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த மாணவி ஆரியாவின் தாயார், தங்களுக்கு நீதி வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.