நாச வெளியிட்ட அறிய படங்கள்.

Monday, January 7, 2013

வாஷிங்டன் : விண்வெளி பற்றிய பல அரிய புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. விண்வெளியின் புற ஊதாக்கதிர்கள் குறித்து அமெரிக்காவின் சுவிப்ட் வானிலை ஆய்வுக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன டெலஸ்கோப் ஆய்வு நடத்தி வருகிறது. விண்வெளியில் அதிகளவில் புற ஊதா கதிர்களே நிறைந்துள்ளது.


இந்த டெலஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட பல படங்கள் இன்னமும் வெளியிடப்படாத நிலையில், புத்தாண்டு பரிசாக நாசாவும், பென் ஸ்டேட் பல்கலைக்கழகமும் இணைந்து இந்த புகைப்படங்களை பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ளன.

“சாதாரண கண்களால் பார்க்க முடியாத புற ஊதாக்கதிரின் அரொய புகைப்படங்களை வெளியிட்டுள்ளோம். புத்தாண்டு பரிசாக இதனை உலக மக்களின் பார்வைக்காக வெளியிட்டுள்ளோம். நாங்கள் ஆராய்ச்சிக்காக சேமித்து வந்த புகைப்படங்களைத் தான் இப்போது பொதுமக்களின் பார்வைக்காக வெளியிட்டுள்ளோம் என பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் மைக்கேல் சீகல் தெரிவித்தார்.