பள்ளி மாணவி உயிரோடு எரிப்பு.

Monday, January 7, 2013

பள்ளி மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்டு, உயிரோடு ‌‌தீ வை‌த்த கொடுமை உ‌த்தர‌பிரதேச மா‌நில‌த்த‌ி‌ல் அர‌ங்கே‌றியு‌ள்ளது. த‌ற்போது அ‌ந்த மாண‌வி உ‌யிரு‌க்கு ஆப‌த்தான ‌நிலை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று வரு‌கிறா‌ர்.

அலகாபாத் அருகில் உள்ள சங்கர்கர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், கடந்த சனிக்கிழமை மதியம் வீட்டில் தனியாக இருந்தபோது பக்கத்து வீட்டுகார‌ர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாள்.

வேலை முடிந்து வீடு திரும்பிய பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி அழுத சிறுமியை உடன் அழைத்துக்கொண்டு நியாயம் கேட்க அந்த காமுகனின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அங்கு இருவீட்டாருக்கும் சண்டை ஏற்பட்டதால், அச்சிறுமியை மிருகத்தனமாக துரத்தி, அவள் உயிருக்கு பயந்து ஓடிகொண்டிருக்கும்போதே அவள் மீது மண்எண்ணெய் ஊற்றி தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

இதனால் பலத்த காயமடைந்த சிறுமி அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்திருப்பது அந்த பகுதியின் பெண்கள் அமைப்பினர் தெரிவித்த பிறகுதான் காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.