சென்னை: கட்சியின் கட்டுப்பாட்டை யார் மீறினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கருணாநிதி, சமுதாய மேன்மைக்காக என் ஆயுள் இருக்கும் வரை பாடுபடுவேன்.
எனக்குப் பின் யார் என்ற கேள்விக்கு பதில் ஸ்டாலின்தான். அவரை மறந்துவிடாதீர்கள் என்று கூறியிருந்தார். இதையடுத்து சென்னையில் நிருபர்களிடம் பேசிய திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளரும், மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி, திமுக ஒன்றும் மடம் அல்ல. இதை நான் மட்டும் சொல்லவில்லை. கருணாநிதி, ஸ்டாலின் இருவருமே இதை பலமுறை கூறியுள்ளனர் என்றார். இதன்மூலம் ஸ்டாலினை தலைவராக்குவதை ஏற்க முடியாது என்பதை சுட்டிக் காட்டியிருந்தார்.
இந்நிலையில் நேற்று நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, எனக்கு வாய்ப்பு கிடைத்தால் மு.க.ஸ்டாலின் பெயரை திமுக தலைவர் பதவிக்கு முன்மொழிவேன் என்று அறிவித்தார். முன்னதாக நடந்த மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளரும், அழகிரியின் ஆதரவாளருமான மூர்த்தி பேசுகையில், அண்ணன் அழகிரியும், தளபதி ஸ்டாலினும் இணைந்து செயலாற்றினால், நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற முடியும் என்றார். அப்போது குறுக்கிட்ட கருணாநிதி அவரிடம் மிகக் கோபமாகப் பேசினார். கருணாநிதி கூறுகையில், கட்சித் தலைமை ஒரு கருத்துச் சொன்னால், உங்கள் அண்ணன் எதிர்த்துப் பேட்டி கொடுப்பாரா? மதுரையில் கட்சியை எப்படி வளர்க்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாதா? இந்த நிலை நீடித்தால் நடவடிக்கை எடுப்பேன். கட்சியின் முடிவுக்கு எதிராகப் பேசும் மாவட்டச் செயலாளர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்தார். அத்தோடு மூர்த்தி நடுநடுங்கியபடி உட்கார்ந்துவிட்டார்.