டெல்லி: ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான பெண்ணின் ஆண்
நண்பரின் பேட்டியை ஒளிபரப்பியதற்காக ஜி நியூஸ் தொலைக்காட்சி மீது வழக்குப்
பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்டு பலியான பெண்ணைப் பற்றிய விவரங்களோ,
புகைப்படமோ வெளியிடப்படாமல் இருந்தது. இதேபோல் அவரது ஆண் நண்பர் பற்றிய
விவரமும் வெளியிடப்படாமல் இருந்தது.
இந்நிலையில் ஜி நியூஸ் தொலைக்காட்சி அப்பெண்ணின் ஆண் நண்பர் பேட்டியை
ஒளிபரப்பியது. அவரது பெயரையும் வெளியிட்டது. அதில், டெல்லி போலீசார்
தங்களுக்கு உதவவில்லை என்று கூறியிருந்தார்.
தற்போது பாதிக்கப்பட்டோர் பற்றிய ரகசிய விவரங்களை வெளியிட்ட குற்றத்தின்
கீழ் டெல்லி போலீசார் ஜி நியூஸ் தொலைக்காட்சிக்கு எதிராக வழக்குப் பதிவு
செய்திருக்கின்றனர்.