கர்நாடகத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யாத போலிசாருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்த விவரம்: கர்நாடகத்தின் சாய்கான் கிராமத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை தனியிடத்துக்குத் தூக்கிச் சென்ற சிலர் அவரை பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கினார்கள். இந்தச் சம்பவம் டிசம்பர் 17ம் தேதி நடைபெற்றது.
கடும் பாதிப்புக்குள்ளான சிறுமி ஹைதராபாதில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.