அருணாச்சலப் பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம் .

Monday, January 7, 2013

அருணாச்சலப் பிரதேச மாநிலம் வடக்கு மலைப்பிரதேசத்தில் இன்று காலை 11 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. அப்போது வீடுகளில் இருந்த மக்கள் பயந்து வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.


ரிக்டர் அளவுகோலில் இது 4.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த செய்தியும் உடனடியாக கிடைக்கவில்லை.