காவ‌ல்துறை உதவி ஆ‌ய்வாள‌ர் கைது.

Thursday, January 10, 2013

கொல்கத்தா‌வி‌ல் இளம்பெண் ஒருவரை காவல்துறை உத‌வி ஆ‌ய்வாள‌ர் ஒருவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலியே ப‌யிரை மேய்ந்த கதை போல, கொல்கத்தா‌வில் உள்ள பெனியாபுக்கூர் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவரை, ஹரே தெரு போலீஸ் நிலையத்தின் உதவி ஆ‌ய்வாள‌ர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியிருக்கிறார்.

காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒருவர் தன் மகளை கற்பழித்து விட்டதாக, அந்த பெண்ணின் தந்தை கொல்கத்தா காவ‌ல்துறை துணை ஆணையரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் அந்த பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தபட்டத்தில் அவர் கற்பழிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.குற்றம் நிரூபிக்கப்பட்ட காரணத்தால் காவ‌ல்துறை உதவி ஆ‌ய்வாள‌ர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.