அட்டை பூச்சிகளால் ரத்தம் உறிஞ்சப்பட்ட நிலையில் கிடந்த மாணவன் மீட்பு.

Tuesday, January 29, 2013

ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகரில் மாயமான இளைஞர் ஒருவர் வனப்பகுதியில் உள்ள புதர்களில் அட்டை பூச்சிகளால் ரத்தம் உறிஞ்சப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 9 வாரங்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகரில் வாழும் மாத்யூ ஆலன்(18) என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி முதல் காணாமல் போனார். மர்மமான முறையில் மாயமான மாணவரை கண்டுபிடிக்க தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய வனப்பகுதிகளுக்கு ட்ரெக்கிங் சென்ற ஒரு குழுவினர், உடல்நலம் குன்றிய நிலையில் அட்டை பூச்சிகளால் சூழப்பட்டிருந்த இளைஞர் ஒருவரை கண்டனர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த அவர்கள், அட்டை பூச்சிகளால் கடிக்கப்பட்டு கிட்டத்தட்ட பாதி எடை குறைந்த நிலையில் மாணவனை கண்டது அதிர்சியளித்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி க்லென் பேகர் கூறுகையில், சுமார் 9 வார காலமாக உணவின்றி, அட்டை பூச்சிகளால் தொடர்ந்து கடிக்கபட்டதால் 50 % உடல் எடை குறைந்து,கால்கள் செயலற்று,கண் பார்வை இழந்த நிலையில் மாணவன் மாத்யூ ஆலன் மீட்கப்பட்டுள்ளார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவனின் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என காவல் அதிகாரி தெரிவித்தார்.