வடகொரியாவில் வெளி உலகிற்கு மறைக்கப்பட்டு வரும் மிகப்பெரிய பஞ்சம் அந்த நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு ஹவாங்கேயிலி தலைவிரித்தாடுகிறது. இதுவரை 10,000 பேர் பட்டிணியால் பலியாகியிருப்பார்கள் என்று விசாரணை தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் பசியால் தனது குழந்தைகளை கொன்று தின்ற தந்தை ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் செய்திகள் காட்டுத் தீயாக பரவி வருகிறது.
வடகொரிய கட்சி அதிகாரிகள் உணவுப்பொருட்களை பதுக்குவதால் பஞ்சமும் பட்டிணியும் தலைவிரித்தாடுவதாக தெரிகிறது.நாட்டின் உணவுப்பஞ்சம் தலைவிரித்தாட வடகொரிய இரண்டு ராக்கெட்டுகளை பெரும் செலவில் விண்ணில் செலுத்தி மகிழ்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆசிய பத்திரிக்கைக் குழுவைச் சேர்ந்த நிருபர் ஒருவர் அங்கு மாறுவேடத்தில் இருந்து சன்டே டைம்ஸ் பத்திரிக்கைக்குத் தெரிவிக்கையில், ஒருவர் சவக்குழியை தோண்டி தனது பேரப்பிள்ளையின் சவத்தை எடுத்து தின்றதாக கூறியுள்ளார். மேலும் மற்றொருவர் தனது குழந்தையையே கொன்று தின்றதாக வந்த செய்திகளால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் தந்தை ஒருவர் தனது மூத்த மகளை கொன்றுள்ளார். இதனை பார்த்த மகனையும் தீர்த்துக் கட்டியுள்ளார். மனைவி இல்லாத நேரத்தில் இந்த இரண்டு கொலைகளையும் செய்த தந்தை மனைவி வந்தவுடன் இறைச்சி உணவு இருப்பதாக தெரிவித்துள்ளார். மனைவிக்கு சந்தேகம் ஏற்படவே அதிகாரிகளிடம் தெரிவிக்க குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது.
ஐநா அதிகாரி வடகொரியா சென்றுள்ளார், ஆனால் பஞ்சம், வறட்சி நிலவும் பகுதிகளை அவருக்கு காண்பிக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது.ஏற்கனவே கடந்த மே மாதத்தில் ஒருவர் தனது சக ஊழியரை கொன்று அவரது மாமிசத்தைத் தின்று மீதியை மட்டன் ஸ்டாலில் விற்றுள்ளதும் அதிகாரபூர்வமாகவே வெளிவந்த தகவல்களாக உள்ள நிலையில் தற்போது நரமாமிச விவகாரம் பூதாகாரமாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.