சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்ட வைகோ.

Wednesday, January 23, 2013

கரூர்: கரூர் அருகே திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைகோ இன்று திருச்சியில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு கரூர் நகருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்த வீரராக்கியாபுரம் கிராமத்தில் ஆம்னி வேன் ஒன்று விபத்தில் சிக்கியிருந்தது. வேனில் இருந்த ஒரு பெண் பலத்த காயம் அடைந்திருந்தார். அவருடன் இருந்தவர்கள் சிறு காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து அது வருவதற்கு தாமதம் ஆனது. ரத்தப்போக்கு அதிகமாகவே வைகோ தன்னுடன் இருந்த கரூர் மாவட்ட செயலாளரின் மூலம் வாகனத்தை ஏற்பாடு செய்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் குளித்தலையை அடுத்த ஐயர் மலை என்பதாகும். சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துமனைக்கு வைகோ அனுப்பிவைத்த சம்பவம் நெடுஞ்சாலையில் சென்றவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.