18 வயது பூர்த்தி அடையாத இளம்பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) சீத்தாலட்சுமி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் நேற்று 16-வயதுள்ள பெண்ணிற்கு குழந்தை திருமணம் நடைபெற உள்ளதாக பெற்ற புகாரினை தொடர்ந்து மாவட்ட சமூக நல அலுவலர் கே.சாந்தி, குழந்தைகள் நல குழுமம் உறுப்பினர்கள் ஷீலா சார்லஸ் மோகன், பாலாஜி, ஆஸ்பி ஜாய்சன், குழந்தைகள் உதவி மையம், சமூக பாதுகாப்புத்துறை அலுவலகர்கள் மற்றும் காவல் துறையினர் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு தடுத்துநிறுத்தப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடத்த முயற்சிப்பதாக பொது மக்களிடமிருந்து புகார்கள் பெறப்படுகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள் போன்ற பொதுவான இடங்களில் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மணமகள் 18 வயது மற்றும் மணமகன் வயது 21 பூர்த்தியடைந்ததற்கான சான்றினை பெற்ற பின்னரே திருமணம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.
வயது பூர்த்தி அடையாமல் திருமணம் நடைபெற்றதாக தெரிய வந்தால் திருமணத்தை நடத்தி வைப்பவர்கள், திருமணம் நடந்த இடத்தின் உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குழந்தை திருமண தடைச்சட்டத்தின்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் புகார்களை தெரிவிக்க குழந்தைகள் உதவி மைய எண் 1098, மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் காவல் துறையினரை தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.