சுப.வீ .யை கண்டித்து மாணவர்கள் போராட்டம்.

Friday, January 11, 2013

நேற்று பிரபல செய்தி சேனல் விவாத நிகழ்ச்சி ஒன்றில் பசும்பொன் தேவர் குருபூஜை அன்று நிகழ்ந்த கொடூர தாக்குதல் ( கற்களால் அடித்தும், பெட்ரோல் குண்டு வீச்சும் )சரியே என்ற கருத்தை தாங்கிய சொற்களால் பேசினார் சுப வீரபாண்டியன். மேலும் சாதிய மோதல்களை விளைவிக்கும் விதத்தில் பல கருத்துக்களை முன்வைத்து பேசியிருந்தார்.


கமுதி தேவர் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம்:

சாதி மோதல்ளை தூண்டும் வகையில் பேசிய சுப வீரபாண்டியனை கண்டித்து கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் இன்று நண்பகல் 12 மணியளவில் வகுப்பை புறக்கணித்து கோசங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.தேசத்தில் நாச வேலைகளுக்கு தூண்டுதலாக இருக்கும் சுப வீரபாண்டியனை தமிழக அரசு உடனே கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் வீரபாண்டியன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் போராட்டம் தொடரும் என்றும் கோசங்கள் எழுப்பப்பட்டது.

                                                                                                                       courtsy-devartv