பெண்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டன. எனவேதான் நாங்கள் பெண்களுக்கு கத்தி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். நாங்கள் விநியோகிக்க உள்ள கத்தி சீனாவில் தயாரிக்கப்பட்டது. ஆபத்து நேரங்களில் பெண்கள் அந்த கத்தியை எடுத்து பயன்படுத்தலாம்.”‘ என்று சிவசேனா அறிவித்துள்ளது. மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேயின் பிறந்த தின விழாவை வருகிற 23-ந்தேதி கொண்டாட சிவசேனா கட்சியினர் திட்ட மிட்டுள்ளனர். மும்பை தெற்கு பகுதி சிவசேனா கட்சியினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
இந்த விழாவின்போது பெண்களுக்கு கத்தி வழங்க சிவசேனா கட்சியினர் தீர்மானித்துள்ளனர். டெல்லி கற்பழிப்பு சம்பவத்தை தொடர்ந்து பெண்கள் தங்களை, தாங்களே பாதுகாத்துக் கொள்ளவே இது போன்ற கத்தி வினியோகம் செய்யப்பட உள்ளது என சிவசேனா தலைவர்களில் ஒருவரான அஜய் சவுத்திரி கூறினார்.
இது குறித்து,”’பெண்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டதாலேயே நாங்கள் பெண்களுக்கு கத்தி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். நாங்கள் விநியோகிக்க உள்ள கத்தி சீனாவில் தயாரிக்கப்பட்டது. அந்த சிறு கத்தியை இரண்டாக மடக்கி பெண்கள் தங்கள் பர்சுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
ஆபத்து நேரங்களில் பெண்கள் அந்த கத்தியை எடுத்து பயன்படுத்தலாம். பெண்கள் தங்கள் சுய பாதுகாப்புக்காக அந்த கத்தியை பயன்படுத்தினால் அதற்காக வழக்கை சந்திக்க நேரிட்டால், அந்த வழக்குக்காக சிவசேனா உதவி செய்யும். 29-ந்தேதிக்கு பிறகு மராட்டியம் மாநிலம் முழுவதும் சிவசேனா அமைப்புகள், பெண்களுக்கு கத்திகளை வினியோகம் செய்வார்கள்.”என்று அவர் கூறினார்.