குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நாடெங்கும் எதிர்வரும் சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளநிலையில், டெல்லி அல்லது மும்பையில் தீவிரவாதிகள் தொடர் குண்டு வெடிப்பில் ஈடுபட கூடும் என்று உளவுத்துறை மத்திய உள்துறையை உஷார்படுத்தியுள்ளது.
மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21ம் திகதி தூக்கில் போடப்பட்டான். இது பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அஜ்மல் கசாப் மரணத்துக்கு பழிக்குப்பழி வாங்கப் போவதாக தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நாடெங்கும் நாளை மறுநாள் நடைபெறவுள்ள இந்த கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் டெல்லியில் குண்டு வெடிப்புகளை நடத்த பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லஷ்கர்- இ- தொய்பா திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
அல் கொய்தா மற்றும் தெக்ரிக்- இ- தலிபான் ஆகிய தீவிரவாத இயக்கங்களுடன் ஒருங்கிணைந்து இந்த தொடர் குண்டு வெடிப்புக்கு லஷ்கர்-இ-தொய்பா திட்டம் தீட்டி இருப்பதை உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது.
தெற்கு டெல்லியில் உள்ள கோவில், சாந்தினி சவுக், காந்தி நகர் மார்க்கெட் மற்றும் ஒரு மெட்ரோ ரெயில் நிலையம் ஆகிய 4 இடங்களில் குண்டுகளை வெடிக்க செய்ய தீவிரவாதிகள் ஏற்பாடு செய்து இருப்பதை உளவுத்துறை உறுதி செய்துள்ளது. எனவே டெல்லி முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி மத்திய அரசிடம் உளவுத்துறை கூறி உள்ளது.
இதையடுத்து, டெல்லியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.