தனித் தெலுங்கானா மாநிலம் உருவாக்குவது குறித்து முடிவெடுக்க, உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே தலைமையில் இன்று புதுடெல்லியில், அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இவ்விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் ஒரு மாதத்தில் முடிவெடுக்கும் என்று கூட்டத்தின் முடிவில் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார். ஆலோசனை கூட்டம் முடிந்து வெளியே வந்த தெலுங்கானா ராஷ்டரிய சமிதியின் தலைவர் சந்திரசேகர் ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டம் பயனளிக்காத ஒரு கூட்டம். இந்த கூட்டத்தில் எனக்கு திருப்தி இல்லை. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க ஒரு மாத கால அவகாசம் தேவைதானா? நாங்கள் இதை நம்பத் தயாராக இல்லை. இனி செயல்பட வேண்டிய விதம் தொடர்பாக நாங்கள் முடிவெடுக்க உள்ளோம்.
தனித்தெலுங்கானா விவகாரத்தில் ஒரு மாதத்தில் முடிவு செய்வதாக மத்திய அரசு இதுவரை நூறு முறைக்கு மேல் கூறியுள்ளது. தெலுங்கானா மக்களை மத்திய அரசு மீண்டும் ஏமாற்றிவிட்டது. இவ்விவகாரத்தில் மத்திய அரசின் போக்கை கண்டித்து தெலுங்கானா பகுதிகளில் நாளை முழு அடைப்பு நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.