தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்முறைகள்.

Saturday, December 29, 2012

வேலூ‌‌ர் மாவ‌ட்ட‌ம், வா‌ணிய‌ம்பாடி அருகே 9 வயதுயடைய மாண‌வி க‌ற்ப‌ழி‌‌க்க‌ப்ப‌ட்டு படுகொலை செ‌ய்ய‌ப்ப‌ட்ட ச‌ம்பவ‌ம் த‌மிழக‌த்த‌ி‌ல்‌ பெரு‌ம் அ‌தி‌ர்‌வை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. மாண‌வி பு‌னிதா க‌ற்ப‌ழி‌க்க‌ப்ப‌ட்டு கொலை செ‌ய்ய‌ப்ப‌ட்ட வேதனை அட‌‌‌ங்குவத‌ற்கு‌ள் ‌மீ‌ண்டு‌ம் ஒரு சோக‌ம் அர‌ங்கே‌றியு‌ள்ளது.

வா‌ணிய‌ம்பாடி அருகே உ‌ள்ள ஆ‌ண்டிய‌ப்ப‌னூ‌ர் ‌கிராம‌த்தை சே‌ர்‌ந்த ராம‌ச்ச‌ந்‌தி‌ர‌ன் எ‌ன்பவ‌ரி‌ன் மக‌ள் காய‌த்‌‌ரி. 9 வயதுடைய காய‌த்‌‌‌ரி 4ஆ‌ம் வகு‌ப்பு படி‌த்து‌ வ‌ந்து‌ள்ளா‌ர்.


இர‌ண்டு பே‌ர் காய‌த்‌ரியை அழை‌த்து செ‌ன்று‌ள்ளன‌ர். இரவு 9 ம‌ணி ஆன ‌பிறகு‌ம் காய‌த்‌ரி ‌வீ‌ட்டி‌ற்கு வராததா‌‌ல் பெ‌ற்றோ‌ர், உற‌வின‌ர்க‌ள் பல இட‌ங்க‌ளி‌ல் தேடி பா‌ர்‌த்‌து‌ள்ள‌ன‌ர்.

அ‌ப்போது, அதே பகு‌தியை சே‌ர்‌ந்த 10ஆ‌ம் வகு‌ப்பு படி‌க்கு‌ம் மாணவ‌‌ரிட‌ம் கே‌ட்டபோது, காய‌த்‌ரியை இர‌ண்டு பே‌ர் அழ‌ை‌த்து செ‌ன்றதாக கூ‌றியு‌ள்ளா‌ர். இதை‌த் தொட‌ர்‌ந்து அ‌ங்கு‌ள்ள வாழை தோ‌ட்ட‌த்த‌ி‌ல் செ‌ன்று பா‌ர்‌த்தபோது மாண‌வி காய‌த்‌‌ரி கொடூரமாக கொலை செ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌கிட‌ப்பதை பா‌ர்‌த்து அ‌தி‌‌ர்‌ச்‌சி அடை‌ந்தன‌ர்.

இது கு‌றி‌த்து தகவ‌ல் அ‌றி‌ந்த போ‌லீசா‌ர் ச‌ம்பவ இ‌ட‌த்து‌க்கு வ‌ந்து மாண‌வி உடலை கை‌ப்ப‌‌ற்‌றி ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். மாண‌வி‌யி‌ன் உட‌லி‌ல் ‌நக‌க்‌கீறல்க‌ள் அ‌திகமாக இரு‌ந்தது. மேலு‌ம் தலை‌யி‌ல் பல‌த்த காய‌ம் இரு‌ந்து‌ள்ளது.

இதனா‌ல் மாண‌வி க‌ற்ப‌ழி‌த்து கொலை செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌க்கலா‌ம் எ‌ன்பதை காவ‌ல்துறை‌யின‌‌ர் உறு‌தி‌ப்படு‌த்‌தியு‌ள்ளன‌ர். இரு‌ந்தாலு‌ம் மரு‌த்துவ ப‌ரிசோதனை‌க்கு ‌பிறகே மாண‌வி எ‌ப்படி கொலை செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர் எ‌ன்று தெ‌ரியவரு‌ம்.இ‌ந்த ‌நிலை‌யி‌ல், ச‌‌ந்தேக‌ப்படு‌ம் வகை‌யி‌ல் 10ஆ‌ம் வகு‌ப்பு மாணவனை ‌‌பிடி‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

அ‌ண்மை‌யி‌ல் தூ‌த்து‌க்குடி மாவ‌ட்‌ட‌ம், செ‌ய்து‌ங்கந‌ல்லூ‌‌ர் அருகே 13 வயதுடைய மாண‌வி பு‌னிதா க‌ற்ப‌ழி‌த்து கொலை செ‌ய்ய‌ப்ப‌‌ட்ட ச‌ம்பவ‌ம் பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌திய ‌நிலை‌யி‌ல் இ‌ன்று வேலூ‌ர் மாவ‌ட்‌ட‌ம் வா‌ணிய‌ம்பாடி அருகே 9 வயதுடைய மாண‌வி க‌ற்ப‌ழி‌த்து கொலை செ‌ய்ய‌ப்ப‌ட்ட ச‌ம்பவ‌ம் பெரு‌ம் அ‌தி‌ர்‌வலையை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.