டெல்லி: டெல்லி நகரம் கற்பழிப்புத் தலைநகரமாக மாறிவருவது வேதனையளிக்கிறது என்று டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
கடந்த சில தினங்களுக்கு முன் ஓடும் பேருந்தில் மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த கற்பழிப்பு சம்பவம் மிகவும் கொடூரமானது.
எனக்கும் மகளும், மருமகளும் உள்ளனர். நகரத்தில் உள்ள அனைத்து பெண்கள் பற்றி தான் கவலைப்படுகிறேன். இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல இந்த ஆண்டில் மட்டும் 600 பாலியல் பலாத்கார குற்றங்கள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டெல்லி கற்பழிப்பு நகரம் என்று கூறப்படுவதை நான் விரும்பவில்லை. ஆனால் உண்மையில் கற்பழிப்பு தலை நகரமாகத்தான் மாறி வருகிறது. இந்த விசயத்தில் நான் பொய்யான வாக்குறுதிகள் எதையும் அளிக்க விரும்பவில்லை. என் கைகள் கட்டப்பட்டுள்ளன, இருந்தாலும் நிச்சயம் நல்ல முடிவு எடுப்பேன் என்றும் ஷீலா தீட்சித் கூறினார். மேலும் பெண்கள் தனியாக இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்க தூதரகம் இணையதளத்தில் அறிவுறுத்தி உள்ளது சரியானதுதான் என்றும் ஷீலா தீட்சித் வேதனையுடன் கூறினார்.