இர‌யி‌ல் க‌ட்டண‌த்தை உய‌ர்‌த்த அரசு முடிவு.

Monday, December 24, 2012

இர‌யி‌ல் க‌ட்டண‌த்தை கிலோ ‌மீ‌ட்டரு‌க்கு 5 காசு முத‌ல் 10 காசு வரை உய‌ர்‌த்த ம‌த்‌திய அரசு முடிவு செ‌ய்து‌ள்ளது. இ‌ந்த க‌ட்டண உய‌ர்வு வரு‌ம் இர‌யி‌ல்வே ப‌ட்ஜெ‌ட்டி‌ல் அ‌றி‌வி‌க்க‌ப்பட உ‌ள்ளது.

குறைவான கட்டணம் மற்றும் தடையில்லா சேவை - இவை இரண்டும் தான் மக்கள் இரயில் பயணத்தை தேர்வு செய்ய முக்கிய காரணங்களாக திகழ்கின்றன.

இந்த நிலையில், இந்திய இரயில்வே நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், மக்களிடம் வசூலிக்கப்படும் இரயில் பயணத்திற்கான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டண உயர்வு வரும் ஆண்டு இரயில்வே ப‌ட்ஜெ‌ட்டி‌ல் அ‌றி‌வி‌க்க‌ப்படு‌ம் என தெரிகிறது.

இது குறித்து இரயில்வே இணை அமை‌ச்ச‌ர் சூரியப்பிரகாஷ் ரெட்டி கூறுகையில், இர‌யி‌ல் பயண கட்டணம் கிலோ மீட்டருக்கு 5 முதல் 10 காசு வரை உயர்த்தப்படலாம் என தெரிவித்தார்.

இரயில் கட்டணம் உயர்த்தப்படும் என்பது உறுதியாக தெரிந்தாலும், இந்த கட்டண உயர்வு எப்போது இருந்து அமுல்படுத்தபடும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

கிலோ மீட்டருக்கு 10 காசு வரை பயணிகள் இரயில் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு கூடுதல் வருவாய் திரட்ட முடியும் என்று தெரிகிறது.