தேவரின இணையதள உதாரண இளைஞர்கள்.

Wednesday, December 19, 2012

இன்றைய சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான பேஸ்புக்கில் அனைத்து தரப்பினரும் பங்கெடுத்து தங்களது நிலைப்பாட்டை பிறர் அறியுமாறு எளிதில் எடுத்துரைப்பார்கள். பெரும்பாலும் இப்படிப்பட்ட சமூக வலைதளங்கள் சமூக சீர்கேட்டை ஏற்படுத்துவதாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த வலைத்தளங்களை சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் மாற்றி பல விசயங்களை அரசு முதற்கொண்டு பயன்படுத்தி வருவதை நாம் அறிந்த ஒன்று.


தேவரின இணையதள உதாரண இளைஞர்கள் :


பெரும்பாலும் இந்த இணையதள இளைஞர்கள் நாட்டின் அக்கறை கருதி வெளியிடும் புரட்சிகர கருத்துக்களில் உள்ள உணர்வும் வீரமும் செயல்பாட்டில் இருப்பதில்லை என்ற ஓர் பொதுக்கருத்து சமூகத்தில் உண்டு. ஆனால் அதை மாற்றி எங்கள் உணர்வும் , உரிமைக் குரலும் இணையதளங்களில் மட்டுமல்லாது மக்கள் மத்தியிலும் களமிறங்கி செயல்படுவோம் என்பதற்கு " திரு. முருகன் சுப்புராம் மற்றும் திரு இரா.ச.இமலாதித்தன் " ஆகியோர் உதாரணமாக உள்ளனர். ஏதோ ஒரு வகையில் இந்த ஜனநாயக உரிமையை பயன்படுத்தி நாட்டின் நலன்கருதி தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ள இந்த இரண்டு இளைஞர்களுக்கும்  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். இவர்களை உதாரணப்படுத்தி சமூக அக்கறையுள்ள இளைஞர்கள் தங்களது ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி தான் சார்ந்த இனத்தின் உரிமையை நிலைநாட்ட முன்வரவேண்டும்.

சுவரொட்டியில் கூறியுள்ள செய்தி :
வன்மையாக கண்டிக்கிறோம்!

தேவர் குருபூஜை அன்று திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட தேவரின படுகொலைகளுக்காக உணர்வுகளை வெளிப்படுத்திய தேவர்குல கூட்டமைப்பு நிறுவனர் திரு.சண்முகையா பாண்டியன், மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் திரு.புதுமலர் பிரபாகரன் ஆகிய இருவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

பெரும்பான்மை முக்குலத்தோர் சமுதாயத்தை பகைக்காதே!
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை மறக்காதே!

                                                                                                                                          courtsy-devartv