நேதாஜியும் ,தேவரும் - திரு.நவமணி அவர்கள் உரை,

Wednesday, December 19, 2012

கடந்த ஞாயிற்று கிழமை  (16-12-2012 ) நேதாஜி அறகட்டளை மற்றும் பசும்பொன் சேவை சங்கம் சார்பில் முத்துராமலிங்க தேவர் மற்றும் நேதாஜி அவர்களின் உண்மை வரலாறு அறிந்து கொள்ளும் கூட்டம் தாம்பரத்தில் நடைபெற்றது,இதில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் திரு.ஜீவ பாரதி( கம்யூனிஸ்ட் ) மற்றும் திரு.நவமணி (அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் ) ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்,
 
தற்போது சாதி அடிப்படையில் பதவி உயர்வு இட ஒதுக்கிடு மசோதா பற்றி நாடாளுமன்றத்தில் நடக்கும் சர்ச்சை பற்றி பேசுகையில் " கல்வி என்பது சாதி,மத ரீதியாக அமைய கூடாது " என்று தேவர் அவர்கள் பொன்மொழியினை நினைவகூர்ந்தார்.பிறகு தேவர் மற்றும் ஜீவா (கம்யூனிஸ்ட் ) இவர்களுக்குள் இருக்கும் அன்பினை குறிப்பிட்டார்.
 
நாதம் பத்திரிகையில் வெளிவந்த வேலு நாச்சியாரின் பெருமைகளை சுட்டி காண்பித்தார்,தேவர் இன படுகொலைகள் குறித்து தனது கண்டனத்தை தெரிவித்தார்,பிறகு நேதாஜியும் , பசும்பொன் தேவரும் எவ்வாறு ஒற்றுமைபடுத்தபட்டு வாழ்ந்தனர் என்பதையும் மிக தெளிவாக கூறினார்.
 
எழுத்தாளர் திரு.ஜீவா பாரதி ( கம்யூனிஸ்ட் ) பேசுகையில் தேவர் இன வரலாற்று அரசர்களை பற்றிய பல குறிப்புகளை கூறினார்,குறிப்பாக " பூலித்தேவன்,முத்துவடுக நாதர்,மற்றும் வேலு நாச்சியார் " ஆகியோரது அறிய வரலாற்றை எடுத்து கூறினார்.
 
 பசும்பொன் தேவர் அவர்கள் பற்றி பேசும்போது தனக்கு எவ்வாறு பசும்பொன் தேவர் அவர்கள் மீது பற்று வந்தது என்றும் குறிப்பிட்டார்,அது மட்டுமின்றி தேவர் அவர்கள் தாழ்த்தப்பட்டோர் மீது எவ்வாறு மதிப்பு வைத்து இருந்தார் என்பதையும்   எடுத்து கூறினார்,இதை கேட்ட அனைவரும் மெய்சிலுர்த்து போனார்கள்.

இசை வேளாளர் சமுகத்தை சேர்ந்த திரு.மலேசியா தங்க காளிஸ்வரன் ( வயது 80) அவர்கள் பசும்பொன் தேவர் மீது பற்றும், பாசமும் வைத்து இருந்தார் என்பதையும் கூறினார்,( மலேசியா தங்க காளிஸ்வரன் அவர்கள் தேவரோடு இணைந்து தொண்டாற்றியவர் ) இது போன்ற மெய் சிலுர்க்கும் படியான தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்து கூறினார்கள்,