புதுடில்லி : தாம் அதிகாரியாக இருந்தபோது சி.பி.ஐ.,விசாரணையில் அரசியல் ரீதியிலான அழுத்தம் இருந்ததாக மாஜி சி.பி.ஐ., இயக்குனர் மிஸ்ரா கூறியுள்ளது பெரும் சர்சையை கிளப்பியுள்ளது. ஆனால் இது போன்ற தலையீட்டில் அரசு நுழைந்ததில்லை என மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
அரசியல் ரீதியாக மத்திய அரசு சி.பி.ஐ.,யை கைப்பாவையாக பயன்படுத்துகிறது என பா.ஜ.,உள்ளிட்ட எதிர்கட்சியினர்
விமர்சித்து வரும் வகையை மெய்யாக்கும் விதமாக முன்னாள் இயக்குனர் தற்போது கூறியள்ளார்.
கடந்த காலத்தில் உ .பி., மாநில முதல்வராக மாயாவதி இருந்தபோது இவர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்படி மாயாவதி பெரும் நெருக்கடிக்கு உள்ளானார். அப்போது விசாரணை அதிகாரியாக இருந்த மிஸ்ரா இந்த விசாரணையில் அழுத்தம் இருந்தது என்பதை என்னால் மறுக்க முடியாது, முழு அரசின் கட்டுப்பாட்டுக்கள் தான் இருக்கிறது. முலாயம்சிங் மற்றும் அவரது மகன் ஆகியோர் மீது தொடரும் விசாரணையிலும் அரசியல் தலையீடு வர வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார். இதற்கு மத்திய அரசு தரப்பில் பதில் அளித்துள்ள அமைச்சர் நாராயணசாமி இது உண்மையல்ல. கேவலமான குற்றச்சாட்டு என்று மறுத்துள்ளார்.
தேசிய கமிஷன் தலைவர் சர்ச்சை:
இதற்கிடையில் மனித உரிமை தேசிய கமிஷன் தலைவராக முன்னாள் சி.பி.ஐ., இயக்குனர்களில் ஒருவரான ஏ.பி.,சிங் நியமிக்கப்படவுள்ளார். இதற்கும் எதிர்கட்சியினர் எதிர்ப்பு கிளம்பும் என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.