பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்ததாலும் அதேநேரத்தில் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தாலும் அணையின் நீர்மட்டம் கீழ்நோக்கி செல்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ளது பவானிசாகர் அணை. தென்னிந்தியாவில் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை கொண்ட இந்த அணையினால் ஈரோடு மற்றும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு லட்சத்து ஏழாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தினால் பயன்பெறுகிறது.
இதுதவிர பவானி ஆற்றில் திறந்துவிடும் தண்ணீரால் தடப்பள்ளி, அரக்கண்கோட்டை மற்றும் காளிங்கராயன் பாசனப்பகுதியை சேர்ந்த ஐம்பதாயிரம் பாசன நிலங்கள் பயன்பெறுகிறது. இதுதவிர சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி, கோபிசெட்டிபாளையம், பவானி ஆகிய நகராட்சி மற்றும் நூற்றுக்கணக்கான டவுன் பஞ்சாயத்து மற்றும் கிராம பஞ்சாயத்துகளின் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதும் பவானிசாகர் அணைதான்.
இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய மழை பெய்யாத காரணத்தால் அணைக்கு வரும் தண்ணீர் அளவு குறைந்தது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்ட இரண்டுக்கும் மேற்பட்ட புயல் சமயத்தில்கூட நீலகிரி மலைப்பகுதியில் மழை ஏமாற்றியதால் பவானிசாகர் அணையின் எதிர்காலம் கேள்விகுறியான நிலையில் உள்ளது.
தற்போது பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் வினாடிக்கு இரண்டாயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் பவானி ஆற்றில் பாசனத்திற்காக வினாடிக்கு 650 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதேநேரத்தில் அணைக்கு வரும் தண்ணீர் அளவு மிகவும் குறைந்துள்ளதால் அணையின் நீர்மட்டம் கீழ்நோக்கி செல்கிறது.
இன்று காலை பத்துமணியளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 49 அடியாக இருந்தது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் சகதி 15 அடி கழித்து 105 அடியாகும். அணைக்கு வினாடிக்கு 176 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு மொத்தம் 2650 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் மொத்த கொள்ளவு 32 டி.எம்.சி., தண்ணீரில் தற்போது 4.828 டி.எம்.சி. மட்டுமே உள்ளது.